Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 26 அக்டோபர் 2026 | 9 ஐப்பசி பராபவ வருடம்

நெல்லையில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

நெல்லையில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

நெல்லையில் சின்ன வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.30 உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காய்கறி சந்தையில் நேற்று சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக கிலோ ரூ.90 மற்றும் ரூ.120 என விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம், நேற்று கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.120 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

Advertisement
இதர காய்கறிகளின் விலையிலும் மாற்றம் காணப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட பல்லாரி வெங்காயம், ரூ.20 உயர்ந்து ரூ.80-க்கு விற்பனையானது. கத்தரிக்காய் கிலோவுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.80-க்கும், தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேவேளையில், கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் விலை குறைந்து ரூ.110-க்கு விற்பனையானது. மற்ற காய்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு