Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 04 நவம்பர் 2026 | 18 ஐப்பசி பராபவ வருடம்

நாளை முதல் ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்

நாளை முதல் ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ விற்பனை: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ ரூ.100 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை குறைந்த விலையில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 10 வகையான காய்கறிகள் கொண்ட ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ ஒன்று ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தச் சிறப்புத் திட்டம் நாளை (வியாழக்கிழமை) முதல் வரும் 7-ம் தேதி வரை, தொடர்ந்து 3 நாட்களுக்கு செயல்படுத்தப்படும். கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் வாயிலாக காய்கறித் தொகுப்புகள் விற்பனை செய்யப்படும். மேலும், சென்னையில் மட்டும் 4 நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்கள் மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தொகுப்பில் இடம்பெறும் காய்கறிகள் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு காய்கறித் தொகுப்பில் இடம்பெறும் பொருட்களின் விவரம்: - பெரிய வெங்காயம் – 500 கிராம் - தக்காளி – 500 கிராம் - கத்தரிக்காய் – 250 கிராம் - உருளைக்கிழங்கு – 250 கிராம் - கேரட் – 200 கிராம் - பீன்ஸ் – 200 கிராம் - பச்சை மிளகாய் – 100 கிராம் - எலுமிச்சை – 100 கிராம் - இஞ்சி – 50 கிராம் - தேங்காய் – 400 முதல் 450 கிராம் வரை விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காய்கறித் தொகுப்பை ரூ.100 என்ற நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

Advertisement
வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகையோ அல்லது குறைவான தொகையோ வசூலிக்கக் கூடாது. மேலும், ஒரு நபருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொகுப்பில் இடம்பெறும் காய்கறிகளுக்கான கொள்முதல் விலையை சம்பந்தப்பட்ட குழு நிர்ணயிக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பையின் செலவாக ஒரு தொகுப்புக்கு ரூ.2.50 கணக்கிடப்பட்டுள்ளது. காய்கறிகளின் கொள்முதல் விலை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விற்பனை விலை, விநியோகச் செலவு மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ.2.50 ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு