திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபபாஸ்டின் (29). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவருக்கும், காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேலின் மகள் மரிய வெல்சியா (26) என்பவருக்கும் நாளை திருமணம் நடைபெற இருந்தது. வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை மதுரையில் நடைபெற இருந்த செவிலியர் தேர்வை எழுதுவதற்காக மரிய வெல்சியாவை தனது இருசக்கர வாகனத்தில் ஜெபபாஸ்டின் அழைத்துச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பிரிவு பகுதியில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று, அவர்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெபபாஸ்டினும், மரிய வெல்சியாவும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மரிய வெல்சியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ஜெபபாஸ்டின் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் கண்முன்னே மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை திருமணம்: விபத்தில் இன்று பலியான மணப்பெண்: மணமகன் கண்முன்னே நடந்த சோகம் திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெபபாஸ்டின் (29).
Advertisement
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் இவருக்கும், காமலாபுரம் சக்கையா நாயக்கனூரைச் சேர்ந்த மானுவேலின் மகள் மரிய வெல்சியா (26) என்பவருக்கும் நாளை திருமணம் நடைபெற இருந்தது. வெள்ளோடு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை மதுரையில் நடைபெற இருந்த செவிலியர் தேர்வை எழுதுவதற்காக மரிய வெல்சியாவை தனது இருசக்கர வாகனத்தில் ஜெபபாஸ்டின் அழைத்துச் சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில், வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பிரிவு பகுதியில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று, அவர்கள் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெபபாஸ்டினும், மரிய வெல்சியாவும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மரிய வெல்சியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த ஜெபபாஸ்டின் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணமகன் கண்முன்னே மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.