Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

நான் பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் பிரச்சனை ஆக்கப்படுகிறது - மேயர் பிரியா ஆதங்கம்

நான் பர்கர் சாப்பிட்டாலும், முடி வெட்டினாலும் பிரச்சனை ஆக்கப்படுகிறது - மேயர் பிரியா ஆதங்கம்

பொதுவாழ்வில் இருக்கும் பெண்களை அவர்களின் தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட முடிவுகளை வைத்து மதிப்பிடக் கூடாது என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “ஏன் எப்போதும் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது? நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் சர்ச்சையாக மாற்றப்படுகிறது. பதவியேற்ற முதல் நாள் முதல் இன்று வரை, மிகவும் சாதாரணமான செயல்கள்கூட பெரும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகின்றன. நான் பர்கர் சாப்பிட்டாலும் விமர்சனம் வருகிறது. தலைமுடியை வெட்டிக்கொண்டாலும் அதுவும் பேசுபொருளாகிறது. எனது ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விமர்சிக்கப்படுகிறது. நான் ஒரு பெண் என்பதாலும், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலும் இதுபோன்ற அணுகுமுறை இருக்கிறதா என்ற எண்ணம் சில நேரங்களில் எனக்கு ஏற்படுகிறது.

Advertisement
பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறும் பெண்ணியவாதிகளும், மற்றவர்களும் இத்தகைய நேரங்களில் எங்கே செல்கிறார்கள் என்பது புரியவில்லை. அரசியலில் இருக்கும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ, மரியாதைக்கு தகுதியற்றவர்களோ கிடையாது. பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணின் தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட முடிவுகளை வைத்து அவரை மதிப்பிட யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் வாழும் உரிமை உள்ளது. தனது வாழ்க்கையைத் தனது விருப்பப்படி அமைத்துக்கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. மேயர் என்ற பதவிக்கு அப்பாற்பட்டு, தனிப்பட்ட மனிதராக இருக்கும் அந்த பெண்ணையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு