Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

நாகர்கோவில் அருகே கூட்டுறவு வங்கி லாக்கரில் 50 பவுன் தங்க நகைகள் மாயம்

நாகர்கோவில் அருகே கூட்டுறவு வங்கி லாக்கரில் 50 பவுன் தங்க நகைகள் மாயம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகைகள் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெபி பிரியங்கா (29) என்பவர், மறவன்குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் லாக்கரைப் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தனது 50 பவுன் தங்க நகைகளை அதில் பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி லாக்கரில் இருந்த நகைகளை மீண்டும் எடுத்துச் செல்வதற்காக கூட்டுறவு சங்கத்திற்குச் சென்றுள்ளார். அப்போது லாக்கரைத் திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த அனைத்து தங்க நகைகளும் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, கோட்டார் காவல் நிலையத்தில் ஜெபி பிரியங்கா புகார் அளித்தார்.

Advertisement
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, கூட்டுறவு சங்கத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளும் காணாமல் போயிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவம் தொடர்பான சந்தேகம் அதிகரித்துள்ளது. தனது வாழ்வாதாரமாக இருந்த 50 பவுன் தங்க நகைகளை விரைவாக மீட்டுத் தர வேண்டும் என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெபி பிரியங்காவும் அவரது கணவரும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர். கூட்டுறவு சங்கத்தின் பாதுகாப்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு