Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

நாகதோஷம் இல்லை... ஜலதோஷம்தான் இருக்கிறது - சட்டசபையில் கலகல விவாதம்

நாகதோஷம் இல்லை... ஜலதோஷம்தான் இருக்கிறது - சட்டசபையில் கலகல விவாதம்

தமிழக சட்டசபையில் ‘நாகதோஷம்’ தொடர்பாக எழுந்த கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் அளித்த பதில், அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக நடைபெற்ற கேள்வி நேரத்தில், சுகாதாரத்துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம், பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி சம்பவங்கள் இருப்பதாகவும், அந்த பகுதிகளில் ‘நாகதோஷம்’ இருப்பதாக தான் அறிந்ததாகவும் தெரிவித்தார். எனவே, பேரவைத் தலைவர் மூலம் சுகாதாரத்துறை அமைச்சர் நாகதோஷம் நீங்குவதற்கான பிரார்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.இதற்கு அமைச்சர் அருண்ராஜ், தமிழக முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு அறிவியல் அடிப்படையிலேயே செயல்பட்டு வருவதாகக் கூறினார். தோஷம், பில்லி சூனியம் போன்றவற்றில் அரசு நம்பிக்கை வைப்பதில்லை என்றும் தெரிவித்தார்.மேலும், உறுப்பினருக்கு அதுபோன்ற நம்பிக்கை இருந்தால், அவரது தொகுதியில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், ஆனால் மாநில அளவில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையே பின்பற்றப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Advertisement
தொடர்ந்து, “ஜலதோஷம்தான் அதிகம் இருக்கிறது. பாம்பு கடி தோஷம் இருப்பதாக கேள்விப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.இதற்கு மீண்டும் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விரும்பினால் நாகதோஷம் நீக்குவதற்கான உரிய நபர்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார்.அதற்கு அமைச்சர் அருண்ராஜ், தோஷத்தின்மீதுதமக்குநம்பிக்கையும்இல்லை,அதனைமேற்கொள்ளும்விருப்பமும்இல்லைஎனதிட்டவட்டமாகக்கூறினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த தி.மு.க. தற்போது தோஷம் குறித்து பேசுவதாகக் குறிப்பிட்டார். தாங்கள் பெரியார் வழியில் வந்தவர்கள் என்றும், பிரச்சினைகளை அறிவியல் பூர்வமாக அணுகுபவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தங்கள் சட்டமன்ற உறுப்பினர் கூறியது உண்மையிலேயே ‘ஜலதோஷம்’ குறித்துதான் என விளக்கம் அளித்தார். தங்களது துணைத் தலைவருக்கு உண்மையாகவே ஜலதோஷம் இருப்பதாகவும், கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் அதற்கும் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.‘நாகதோஷம்’ முதல் ‘ஜலதோஷம்’ வரை நீண்ட இந்த விவாதம் தமிழக சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு