Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

நிலப்பிரச்சினைக்கு தீர்வு: கலெக்டருக்கு சீர்வரிசை கொடுத்து நன்றி தெரிவித்த முஸ்லிம் பெண்கள்

நிலப்பிரச்சினைக்கு தீர்வு: கலெக்டருக்கு சீர்வரிசை கொடுத்து நன்றி தெரிவித்த முஸ்லிம் பெண்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டருக்கு 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் சீர்வரிசை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

கீழக்கரையை அடுத்த காஞ்சிரங்குடி பகுதியில் நீண்ட காலமாக நில அளவீடு செய்யப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக தனியார் அமைப்பு மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, நிலத்தை முறையாக அளவீடு செய்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி, கீழக்கரை தாசில்தார் தலைமையில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில அளவையர்கள் காஞ்சிரங்குடி பகுதிக்கு நேரில் சென்று நிலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் முறையான அளவீடு மேற்கொள்ளப்பட்டு, பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Advertisement

இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சீர்வரிசை வழங்கினர். 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் பூக்கள், பழங்கள், காய்கறிகள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை தட்டுகளில் கொண்டு வந்து மாவட்ட கலெக்டர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினர்.

மக்கள் அன்புடன் வழங்கிய சீர்வரிசை பொருட்களை கலெக்டர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்பட்டு, உரிய தீர்வு கிடைக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு