நடிகைகளைப் பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு அதில் மகிழ்ச்சி அடைவோர் தங்களது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்குப் பிறகும் ஆலியா பட் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலியா பட், சமூக வலைதளங்களில் திரை பிரபலங்கள், குறிப்பாக நடிகைகள் குறித்து அவதூறாக பேசப்படுவது தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்துகொண்டார்.
Advertisement
செல்போன் கையில் இருப்பதால் தாங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற எண்ணம் சிலரிடம் இருப்பதாக அவர் கூறினார். நடிகைகளைப் பற்றி தவறான கருத்துகளை தெரிவித்து அதனை ரசிப்பது மிகவும் அபத்தமான செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.ரசிகர்களை மகிழ்விப்பதற்காக நடிகைகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பணியாற்றுவதாக தெரிவித்த ஆலியா பட், அவர்களை பாராட்ட முடியாவிட்டாலும் தவறாக பேசாமல் இருப்பது அவசியம் என்றார். இனியாவது நடிகைகளைப் பற்றி அவதூறாக பேசும் நபர்கள் தங்களது செயல்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எதிர்பார்ப்பு தெரிவித்தார்.