Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

தொகுதி மறுவரையறை குறித்து தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா? – ஆ.ராசா கேள்வி

தொகுதி மறுவரையறை குறித்து தெரியாதவர்கள் கூட்டம் நடத்தலாமா? – ஆ.ராசா கேள்வி
தொகுதி மறுவரையறை தொடர்பான விவரங்கள் குறித்து எதுவும் தெரியாதவர்கள், அது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துவது எப்படி? என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக தவெக அரசு சார்பில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறுகிறது.தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 57 எம்.பி.க்களில் 37 பேர் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். திமுக, தேமுதிக, மநீம, அதிமுக மற்றும் பாமகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.அதேவேளையில், காங்கிரஸ், விசிக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 19 எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
Advertisement
காங்கிரஸ் எம்.பி. சுதா பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில், பெரம்பலூரில் செய்தியாளர்கள் திமுக எம்.பி. ஆ.ராசாவிடம் தவெக சார்பில் நடத்தப்படும் அனைத்து எம்.பி.க்கள் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த ஆ.ராசா, நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களே இல்லாத ஒரு கட்சி கூட கூட்டம் நடத்தலாம். ஆனால், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எந்தத் தகவலும் தெரியாதவர்கள் இதுபோன்ற கூட்டத்தை நடத்தலாமா? என்று கேள்வி எழுப்பினார். ஆ.ராசாவின் இந்தக் கருத்து தற்போது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு