Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 10 செப்டம்பர் 2026 | 25 ஆவணி பராபவ வருடம்

தெற்கு ரெயில்வேயில் 5,068 கி.மீ. பாதைகளும் 100% மின்மயம்: டீசல் என்ஜின்களுக்கு இனி விடை

தெற்கு ரெயில்வேயில் 5,068 கி.மீ. பாதைகளும் 100% மின்மயம்: டீசல் என்ஜின்களுக்கு இனி விடை

தெற்கு ரெயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 5,068 கிலோமீட்டர் நீளமுள்ள ரெயில் பாதைகளும் தற்போது முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தெற்கு ரெயில்வேயின் அனைத்து வழித்தடங்களும் 100 சதவீதம் மின்சார இயக்கத்துக்கு வந்துள்ளன. பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து வசதிகளில் ஒன்றாக ரெயில் சேவை இருந்து வருகிறது. முன்பதிவில்லாத பெட்டிகள் முதல் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகள் வரை பல்வேறு வகையான வசதிகளும், கட்டணங்களும் ஒரே ரெயிலில் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். ஒரே நேரத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் திறனும் ரெயில்களுக்கு உள்ளது. ரெயில் போக்குவரத்தின் தொடக்க காலத்தில் நீராவி என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அவை டீசல் என்ஜின்களாக மாறின. தற்போது ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, ரெயில் இயக்கம் படிப்படியாக மின்சார என்ஜின்களுக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதற்கேற்ப, தமிழகம் உள்ளிட்ட தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் ரெயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரெயில்வேயின் கீழ் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவற்றின் ரெயில் பாதைகள் முழுமையாகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், தெற்கு ரெயில்வே நிர்வகிக்கும் 5,068 கி.மீ. நீளமுள்ள அனைத்து ரெயில் பாதைகளும் தற்போது 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே வரலாற்றில் இது முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

Advertisement

இதன் இறுதிக்கட்டமாக, தமிழகத்தில் உள்ள பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையிலான 71 கி.மீ. தூர ரெயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. புதிதாக மின்மயமாக்கப்பட்ட இந்தப் பிரிவில் தெற்கு ரெயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் கணேஷ், செப்டம்பர் 9-ம் தேதி சட்டப்பூர்வ ஆய்வுப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டார். தெற்கு ரெயில்வேயின் முழு ரெயில் பாதை வலையமைப்பும் மின்மயமாக்கப்பட்டுள்ளதால், டீசல் என்ஜின்களின் பயன்பாட்டுக்கான தேவை இனி இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும், ஒரு ரெயிலை இயக்கும்போது என்ஜினை மாற்ற வேண்டிய அவசியம் குறைவதால் பயண நேரத்தை குறைக்கவும், ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும். தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் இந்தியாவில் 1931-ம் ஆண்டு மே 11-ம் தேதி தொடங்கின. அப்போது பம்பாய் என அழைக்கப்பட்ட மும்பையில் இயங்கி வந்த மின்சார ரெயில் சேவை பின்னர் சென்னைக்கும் விரிவடைந்தது. சென்னையில் 1968-ம் ஆண்டு கடற்கரை - தாம்பரம் இடையிலான ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. இதன் பின்னர் அந்த வழித்தடத்தில் புறநகர் மின்சார ரெயில் சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு