Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதி விபத்து - அரசு அலுவலர் உயிரிழப்பு

தூத்துக்குடி: பைக் மீது லாரி மோதி விபத்து - அரசு அலுவலர் உயிரிழப்பு

தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கொல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (47). கோவில்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாக ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வடக்கு பரம்பூர் கிராமத்தில் வசித்து வந்தார். முருகனின் மனைவி பழனியம்மாள், எஸ்.கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வீரஆனந்தராஜ், வீரமுத்து என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தபால்களை பெற்றுக்கொண்ட முருகன், தனது பைக்கில் கோவில்பட்டி நோக்கி புறப்பட்டார். தூத்துக்குடி-மதுரை நான்கு வழிச்சாலையில் எப்போதும்வென்றான் அருகே பசுவந்தனை விலக்கு பகுதியில் சென்றபோது, எதிர்திசையில் இருந்து நான்கு வழிச்சாலைக்குள் வந்த லாரி எதிர்பாராதவிதமாக அவரது பைக் மீது மோதியது.

Advertisement
இந்த விபத்தில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து எப்போதும்வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் லாரி ஓட்டுநர், கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் (39) என்பவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் வடக்கு பரம்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு