Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

தூத்துக்குடி: கத்தியால் தாக்கி செல்போன், பணம் பறித்தவர் கைது

தூத்துக்குடி: கத்தியால் தாக்கி செல்போன், பணம் பறித்தவர் கைது

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றவரை கத்தியால் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி சங்கரப்பேரி கே.வி.கே.சாமி நகரைச் சேர்ந்த கருப்பசாமி (57), கடந்த 23-ந்தேதி காலை சுமார் 9 மணியளவில் உழவர் சந்தை அருகேயுள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு மேலூர் ரெயில் நிலையம் நோக்கி நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த 2 பேர் அவரை வழிமறித்து தாக்கியதுடன், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். அவர்களை தடுக்க முயன்ற கருப்பசாமியின் தலையில் கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி ரெயில்வே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement
இதையடுத்து திருநெல்வேலி இருப்புப்பாதை வட்ட இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடி இரண்டாவது கேட் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் ராமலக்ஷ்மணன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட செல்போன், சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட கத்திமற்றும் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ராமலக்ஷ்மணனை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான தேவராஜனை, தூத்துக்குடி வடபாகம் போலீசார் வேறு ஒரு வழக்கில் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு