Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 16 செப்டம்பர் 2026 | 31 ஆவணி பராபவ வருடம்

தூத்துக்குடியில் 18-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு

தூத்துக்குடியில் 18-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வருகிற 18-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோகத்துக்கான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் பாதையில் உள்ள கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

Advertisement
இந்த பராமரிப்பு பணிகள் 18.9.2026, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு