சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில் மீனவர்கள் வலை பின்னுவதற்காகப் புதிதாக அமைக்கப்பட்ட கூடத்தில், திருநீறு மற்றும் ருத்ராட்சையுடன் திருவள்ளுவரின் ஓவியம் வரையப்பட்டுள்ளதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், சின்ன நீலாங்கரையில் அமைக்கப்பட்டுள்ள மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில், திருநீறு, ருத்ராட்சை உள்ளிட்ட அடையாளங்களுடன் பழமையான தோற்றத்தில் திருவள்ளுவரின் ஓவியம் இடம்பெற்றிருப்பதை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அடையாளங்கள் நீக்கப்பட்டதாகவும், சனாதன தர்மம் குறித்துக் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகவும் தனது பதிவில் சுட்டிக்காட்டிய அவர், தற்போது இந்து மத அடையாளங்கள் பாரம்பரிய வடிவில் மீண்டும் இடம்பெறுவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும், முதலமைச்சர் ஜோசப் விஜய் தாய் மூகாம்பிகை கோவில், கனகதுர்க்கை கோவில் உள்ளிட்ட இந்து வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்றும் வானதி ஸ்ரீனிவாசன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.