திருச்செந்தூரில் 75 அடி தூரம் திடீரென உள்வாங்கிய கடல்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடையேயுள்ள கடல் பகுதியில், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த நாட்களுக்கு முந்தைய நாளிலும், அடுத்த நாளிலும் இத்தகைய மாற்றம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் கடல்நீர் திடீரென சுமார் 75 அடி தூரம் உள்வாங்கியது.