Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 02 செப்டம்பர் 2026 | 17 ஆவணி பராபவ வருடம்

தி.மு.க. முப்பெரும் விழா: விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு

தி.மு.க. முப்பெரும் விழா: விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு

தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் பெரியார் பிறந்த நாள், அண்ணா பிறந்த நாள் மற்றும் கட்சி தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தி.மு.க. முப்பெரும் விழா வரும் 15-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் பல்வேறு பிரிவுகளில் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை தி.மு.க. தலைமை தற்போது அறிவித்துள்ளது.அதன்படி, பெரியார் விருது தி.மு.க. விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கு வழங்கப்படுகிறது.

Advertisement
அண்ணா விருது சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் ஜி.கே.சுபாஷுக்கு வழங்கப்பட உள்ளது.கலைஞர் விருது கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், திருச்சி சிவா எம்.பி.க்கும் வழங்கப்படுகிறது. பாவேந்தர் விருது கட்சியின் மருத்துவ அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமுவுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், பேராசிரியர் விருது தலைமை செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பிக்கும், மு.க.ஸ்டாலின் விருதுஇளைஞர் அணி துணைச் செயலாளர் நா.இளையராஜாவுக்கும் வழங்கப்பட இருக்கிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு