Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 29 அக்டோபர் 2026 | 12 ஐப்பசி பராபவ வருடம்

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியின் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடியில் சோதனை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நந்தகுமார். இவருக்குச் சொந்தமான வீடு, காட்பாடி காந்திநகரில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.634 கோடி முறைகேடு புகார் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நகராட்சித் துறை அமைச்சராக கே.என்.நேரு பதவி வகித்தார். அப்போது நகராட்சித் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் ரூ.634 கோடி லஞ்சமாகப் பரிமாறப்பட்டதாக அமலாக்கத்துறை, தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியது. இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 25 இடங்களில் சோதனை இதனைத் தொடர்ந்து, கே.என்.நேருவின் வீடு உள்ளிட்ட அவருடன் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 25 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி கே.என்.நேருவின் வீடு உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது இரண்டாம் கட்ட சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கே.என்.நேருவுடன் தொடர்புடைய இடங்களில் நடைபெறும் சோதனையின் தொடர்ச்சியாக, முன்னாள் எம்.எல்.ஏ. நந்தகுமாரின் வீட்டிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு