Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 25 அக்டோபர் 2026 | 8 ஐப்பசி பராபவ வருடம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை பெய்தது. இதில் நிலக்கோட்டையில் அதிகபட்சமாக 60.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் 49 மி.மீ., புகையிலை ஆராய்ச்சி மையத்தில் 48 மி.மீ., பழனியில் 9.60 மி.மீ., கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 3.20 மி.மீ., ரோஜா பூங்காவில் 2.60 மி.மீ., சத்திரப்பட்டியில் 17.20 மி.மீ., காமாட்சிபுரத்தில் 48.80 மி.மீ. மற்றும் திண்டுக்கல்லில் 55.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 294 மி.மீ. மழை பெய்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்றும் நாளையும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement
இதனால் பகல் முழுவதும் கனமழை பெய்யுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவியது. இந்நிலையில், இன்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இடையிடையே சாரல் மழையும், சில நேரங்களில் பலத்த மழையும் பெய்தது. இருப்பினும், சில நிமிடங்களிலேயே மழை நின்றதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். நாளையும் கனமழை எச்சரிக்கை நீடிப்பதால், திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு