Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

தாய் மாமன் தங்க மோதிர திட்டம்: திரிஷா ரசிகர் மன்ற போஸ்டரால் பரபரப்பு

தாய் மாமன் தங்க மோதிர திட்டம்: திரிஷா ரசிகர் மன்ற போஸ்டரால் பரபரப்பு

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவரது வருகையை முன்னிட்டு, மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள வித்தியாசமான போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ளன. மதுரையின் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர்களில், ஒரு புறம் பச்சிளம் குழந்தையை முதல்-அமைச்சர் விஜய் கையில் ஏந்தியிருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நடிகை திரிஷாவின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் இல்லாத குறையை போக்கும் வகையில் தன்னையே தாய்மாமனாகக் கருதி மகிழும் முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement
முதல்-அமைச்சர் விஜய்யின் மதுரை வருகையை ஒட்டி ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. நடிகை திரிஷா த.வெ.க.வில் இணையவுள்ளதாகவும், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் வெளியாகி வரும் தகவல்களுக்கு மத்தியில் இந்த போஸ்டர் கவனம் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக மதுரையில் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டபோதும், திரிஷாவை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. தற்போது அரசு விழாக்களின் மேடைகளிலும், முதல்-அமைச்சரின் சில அரசியல் நிகழ்ச்சிகளிலும் திரிஷா மற்றும் அஜித்குமார் ஆகியோரின் புகைப்படங்களை தொண்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், திரைத் துறையைத் தாண்டி தமிழகத்தின் மாற்று அரசியல் களத்திலும் இது புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு