Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும்‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரம் வழங்கப்படும் என த.வெ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த விஜய்க்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் தவெக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையம் முதல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அவர்களை பார்த்து கை அசைத்தபடியே விஜய் சென்றார். பின்னர் பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக ரோடு ஷோவில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு விஜய் சென்றார். வழியெங்கும் திரண்டிருந்த பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை அரசு மருத்துவமனை கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற விழாவில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

Advertisement
அப்போது மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த 25 குழந்தைகளுக்கு தனது கைகளால் தங்க மோதிரங்களை அணிவித்தார். மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் மோதிரங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்குச் சென்ற விஜய், அங்கு பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். மேலும் சிகிச்சையில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரித்தார். இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் இடம்பெறும் செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் இந்தத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 2026 ஜூன் 22-ம் தேதி முதல் தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் தினமும் 100 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு