தாம்பத்தியத்துக்கு அழைத்த கணவன்.. ரீல்ஸ் பார்த்த மனைவி.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெங்களூரு அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பத்தியத்துக்கு மனைவி மறுத்ததுடன், தனக்கு உணவு சமைத்து தரவில்லை என்றும் கூறி ஏற்பட்ட தகராறில், மனைவியை கணவர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே கும்பலகோடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கேருபாளையாவில் உள்ள வாடகை வீட்டில் 24 வயதான தீரஜ்குமார் தனது 20 வயது மனைவி ரீமாகுமாரியுடன் வசித்து வந்தார். இருவரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தீரஜ்குமார் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.கடந்த ஜூலை 29-ம் தேதி, வீட்டுக்குள் ரீமாகுமாரி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்டிருந்தது. இதையடுத்து தீரஜ்குமார் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். சம்பவம் குறித்து கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.இந்நிலையில், பீகாரில் பதுங்கியிருந்த தீரஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், கொலைக்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.ரீமாகுமாரியை தீரஜ்குமார் காதலித்து வந்ததாகவும், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அவரை பெங்களூருவுக்கு அழைத்து வந்து திருமணம் செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் திருமணத்துக்குப் பிறகு ரீமாகுமாரியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் கணவரிடம் பேசுவதை தவிர்த்து, பெரும்பாலான நேரத்தை செல்போனில் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதில் செலவிட்டதாக கூறப்படுகிறது.மேலும், கணவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபடவும் அவர் மறுத்ததாகவும், தனக்கான உணவை மட்டும் சமைத்து சாப்பிட்டுவிட்டு, கணவருக்கு உணவு தயாரித்து கொடுக்காமல் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.