Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தவெக எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களுக்கு விஜய்யே பொறுப்பு: நடிகை கஸ்தூரி விமர்சனம்

தவெக எம்.எல்.ஏ.க்கள் மீதான புகார்களுக்கு விஜய்யே பொறுப்பு: நடிகை கஸ்தூரி விமர்சனம்

தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்து வரும் புகார்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய், திருச்சி வேட்பாளரும் விஜய், மதுரை கிழக்கு வேட்பாளரும் விஜய் என்றும், அனைத்து தொகுதிகளிலும் தனது பெயருக்கே வாக்களிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு கூறிய விஜய்தான், தற்போது அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது தொடர்ந்து எழுந்து வரும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரின் பேச்சுகளைக் கேட்பதற்காகவா மக்கள் விசில் சின்னத்திற்கு வாக்களித்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் விஜய்க்காகப் பேசும் குரல்களா என்றும் தனது பதிவில் விமர்சித்துள்ளார். எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் முதலமைச்சர் அதைக் கண்டுகொள்ளாமல், திருமணம் மற்றும் கார் பந்தயம் எனத் தனது நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதாக மக்கள் பேசத் தொடங்கியுள்ளதாகவும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரங்களில் விஜய் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தனது பதிவின் இறுதியில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு