Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் மீண்டும் இளைஞர்கள் போராட்டம்

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்ஐஆர் உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளுக்கும் அவர் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி), கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

Advertisement
இந்த சூழலில், எஸ்ஐஆர் விவகாரத்தை முன்வைத்து தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி டெல்லியில் இளைஞர்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைத் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதிலும், தடையை மீறி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடித்தது. காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கிய போராட்டம், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து, இன்றும் நடைபெற்றது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு