திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று 61 ஆயிரத்து 361 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். 18 ஆயிரத்து 722 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அன்று கோவில் உண்டியலில் ரூ.4 கோடியே 70 லட்சம் காணிக்கை வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Advertisement
அன்னப்பிரசாதத்தை 1 லட்சத்து 84 ஆயிரம் பக்தர்கள் பெற்றுக்கொண்டனர். அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 189 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.