Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

திருச்சி: பணியில் இருந்த ஓட்டுநர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் - துறையூர் இன்ஸ்பெக்டரின் நெகிழ்ச்சி செயல்

திருச்சி: பணியில் இருந்த ஓட்டுநர்களுடன் தீபாவளி கொண்டாட்டம் - துறையூர் இன்ஸ்பெக்டரின் நெகிழ்ச்சி செயல்

தீபாவளி பண்டிகையன்று குடும்பத்தினருடன் கொண்டாட முடியாமல் பணியில் ஈடுபட்டிருந்த லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கு இனிப்புகளை வழங்கி, அவர்களுடன் இணைந்து பண்டிகையைக் கொண்டாடிய துறையூர் காவல் ஆய்வாளர் கருணாகரனின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தபோதிலும், பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, குடும்பத்தினருடன் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியுடன் பண்டிகையைக் கொண்டாடினர். இருப்பினும், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோர் தீபாவளி நாளிலும் தங்களது கடமைகளைத் தொடர்ந்து மேற்கொண்டனர். இதனால், பலருக்கு குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான காவல்துறையினர், பெரம்பலூர் புறவழிச்சாலையில் உள்ள சொரத்தூர் ரவுண்டானா வழியாகச் சென்ற லாரி மற்றும் பேருந்துகளை நிறுத்தினர்.

Advertisement
பின்னர், அவற்றை ஓட்டி வந்த ஓட்டுநர்களை அழைத்து தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது ஓட்டுநர்களிடம் பேசிய இன்ஸ்பெக்டர் கருணாகரன், குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக இரவு, பகல் பாராமல் சாலைகளில் பயணித்து உழைக்கும் அவர்களது சேவையைப் பாராட்டினார். தொடர்ந்து, ஓட்டுநர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து, காவல்துறையினருடன் இணைந்து ஓட்டுநர்களும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாட முடியாத சூழலில் இருந்த ஓட்டுநர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் காவல்துறையினர் முன்னெடுத்த இந்தச் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் காவல்துறையினரின் மனிதநேய முயற்சிக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு