Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை; 350-க்கும் மேற்பட்டோர் கைது

தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை; 350-க்கும் மேற்பட்டோர் கைது

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 17 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். தீபாவளி பண்டிகை தினத்தில் மட்டும் 11 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகக் கூறி எதிர்க்கட்சிகள் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தன. இதன் தொடர்ச்சியாகவே, சட்டம் ஒழுங்கு தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போலீசார் தீவிர சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளில் இறங்கினர்.

Advertisement
சென்னையில் 36 பேர் கைது சென்னையில் 185 ரவுடிகள் உட்பட மொத்தம் 222 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நடவடிக்கையில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கையில் 43 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது சிவகங்கை மாவட்டத்தில் ஒரே இரவில் மேற்கொள்ளப்பட்ட போலீஸ் நடவடிக்கையில் 43 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், 948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 130 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நெல்லை, தஞ்சையிலும் அதிரடி நடவடிக்கை திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே இரவில் ரவுடிகள் 33 பேர் உட்பட மொத்தம் 295 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போலீசார் மேற்கொண்ட இந்தத் தொடர் நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கை சீரமைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு