Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

தமிழகத்தில் 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு; அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

தமிழகத்தில் 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு; அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

தமிழகத்தில் இதுவரை 17 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற காணொலி வாயிலான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் அருண்ராஜ் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். கூட்டம் பழைய கட்டடத்தின் முதல் தளத்தில் நடைபெற்றது. இதற்காக புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் உள்ள லிப்டில் அமைச்சர் அருண்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் ஆகியோர் சென்றனர். அப்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், லிப்ட் இரண்டாவது தளத்தில் நிற்காமல் பாதியிலேயே சில நேரம் நின்றது. பின்னர் நேரடியாக ஏழாவது தளத்திற்குச் சென்றது. அங்கும் கதவுகள் திறக்காத நிலையில் மீண்டும் கீழ்நோக்கி வந்த லிப்ட், ஆறாவது தளத்தில் நின்றபோது கதவுகள் திறந்தன. இதனால் அமைச்சர் உள்ளிட்டோர் சிறிது நேரம் லிப்ட்டுக்குள் சிக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆறாவது தளத்தில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேறினர். இதையடுத்து பழைய கட்டடத்தின் லிப்ட் மூலம் முதல் தளத்துக்குச் சென்ற அமைச்சர், முதல்-அமைச்சர் சி.

Advertisement
ஜோசப் விஜய் பங்கேற்ற காணொலி ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், தமிழகத்தில் 17 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே இருப்பதாகவும் அவர் கூறினார். டெங்கு பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நோய் வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்பதால், பொதுமக்கள் கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், சில கட்சிகளின் தூண்டுதலால் தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுவதாக மக்கள் கூறுவதால், இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். தவெக வேட்பாளர்கள் செல்லும் பகுதிகளில் சில கட்சிகள் திட்டமிட்டு கோஷங்களை எழுப்புவதாகவும், ஆனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் முதல்-அமைச்சருக்கு ஆதரவாக இருப்பதாகவும் அருண்ராஜ் கூறினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு