Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தீபாவளி கொண்டாட்டம்: தமிழகத்தில் 2 நாட்களில் 4,098 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதி- 2 பேர் உயிரிழப்பு

தீபாவளி கொண்டாட்டம்: தமிழகத்தில் 2 நாட்களில் 4,098 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதி- 2 பேர் உயிரிழப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீக்காயங்கள், சாலை விபத்துகள் மற்றும் மோதல் சம்பவங்களில் காயமடைந்த 4,098 பேர் கடந்த இரண்டு நாட்களில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 7-ம் தேதி காலை முதல் 9-ம் தேதி காலை வரையிலான 48 மணி நேரத்தில் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பட்டாசு வெடிக்கும்போது ஏற்பட்ட தீக்காயங்கள், சாலை விபத்துகள் மற்றும் தகராறுகளால் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 237 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
மதுரையில் 206 பேரும், செங்கல்பட்டில் 185 பேரும், சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் 138 பேரும், தூத்துக்குடியில் 91 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பட்டாசு மற்றும் விபத்து தொடர்பான சம்பவங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீபாவளிப் பண்டிகையின்போது ஏற்படும் அவசர மருத்துவத் தேவைகளைக் கையாளும் வகையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு