Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

தங்க மோதிரத்தை விட தரமான பால் தான் தேவை: தமிழிசை சவுந்தரராஜன்

தங்க மோதிரத்தை விட தரமான பால் தான் தேவை: தமிழிசை சவுந்தரராஜன்

குழந்தைகளுக்கு தங்கத்தைவிட தரமான பால் வழங்கப்படுவதே தற்போதைய முக்கியத் தேவை என பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், முதலில் மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். குழந்தைகளுக்கு பால் தேவைப்படும் நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்கு முன்பாக தரமான பால் கிடைப்பதில் உள்ள தட்டுப்பாட்டை எப்போது சரிசெய்யப் போகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மக்களின் தினசரி பால் தேவை 30 லட்சம் லிட்டராக உள்ளதாகவும், ஆனால் ஆவின் நிறுவனம் 14.5 லட்சம் லிட்டர் மட்டுமே விநியோகிப்பதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், ஆவின் பால் விற்பனை நிலையங்களுக்கு பால் வருவதற்கு முன்பே விற்றுத் தீர்ந்து விடுவதால், மக்கள் அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தங்க மோதிரத்தைவிட தங்களுக்கு தற்போது பால் தான் தேவை என்பதை குழந்தைகள் சொல்லாமல் உணர்த்திக் கொண்டிருப்பதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு