Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

‘டோரதி’ படத்தை மீண்டும் பார்க்க விரும்பவில்லை - ‘பிரேமலு’ நடிகர் சங்கீத் பிரதாப்

‘டோரதி’ படத்தை மீண்டும் பார்க்க விரும்பவில்லை - ‘பிரேமலு’ நடிகர் சங்கீத் பிரதாப்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைபபெற்ற திரைப்படம் ‘டோரதி’. சனந்த், ரிஷிகாந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சிறுவயது நண்பர்களான சுப்பு, கார்த்தி ஆகிய இருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்கம் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந்த இவர்கள், பெரியவர்களான பிறகு சந்திக்கும் மாற்றங்கள் மற்றும் நட்புக்குள் உருவாகும் பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாக இப்படம் எடுத்துரைக்கிறது. இதில் கீர்த்தி சுரேஷ், டோரதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், அதன் கதைக்களம், நடிகர்களின் நடிப்பு மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளுக்காகப் பாராட்டுகளைப் பெற்றது.

Advertisement
இந்நிலையில், மலையாளத் திரைப்படமான ‘பிரேமலு’ மூலம் பிரபலமான நடிகர் சங்கீத் பிரதாப், ‘டோரதி’ படத்தைப் பாராட்டி சமூக வலைதளத்தில் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “டோரதி படத்தை இனி மறுமுறை பார்க்கக் கூடாது என முடிவெடுத்துள்ளேன். என் வாழ்நாளில் மிகச் சிறந்த இரண்டரை மணி நேரத்தை இந்தப் படம் எனக்குப் பரிசளித்துள்ளது. முதல்முறை பார்த்தபோது உணர்ந்த அந்த மாயாஜால அனுபவத்தை வேறு எதனாலும் மீண்டும் கொடுக்க முடியாது” என அவர் தெரிவித்துள்ளார். சங்கீத் பிரதாப்பின் இந்தப் பதிவு தற்போது திரைப்பட ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. ‘டோரதி’ திரைப்படம் தன்னிடம் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பது படக்குழுவினருக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு