Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களும் காவிரி நீரை சுமூகமாக பகிர்ந்து கொள்வதற்காக, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 2018-ம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டன. அதன்பிறகு, இரு அமைப்புகளும் அவ்வப்போது கூட்டங்களை நடத்தி நதிநீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.இதுவரை காவிரி மேலாண்மை ஆணையம் 52 முறை கூடியுள்ளது.

Advertisement
இந்நிலையில், ஆணையத்தின் 54-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 4 மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, தமிழக அதிகாரிகள் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் வலியுறுத்த உள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு