Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான பாசனப் பணிகளை தொடங்கும் வகையில், கல்லணையில் இருந்து நாளை காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், இன்று காலை கல்லணையை வந்தடைந்தது. கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்த நிலையில், அங்கிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றின் வழியாக கல்லணைக்கு வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தேவையான பாசன வசதியை ஏற்படுத்தும் வகையில், கல்லணையில் இருந்து நாளை காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

Advertisement
இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் வினோத் பங்கேற்று தண்ணீரை திறந்து வைக்கிறார்.நிகழ்ச்சியில் டெல்டா மாவட்டங்களைச்சேர்ந்தவிவசாயிகள்,மாவட்டகலெக்டர்கள்,சட்டமன்றஉறுப்பினர்கள்உள்ளிட்டோர்பங்கேற்பார்கள்எனஎதிர்பார்க்கப்படுகிறதுகல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் ஆகியவற்றின் வழியாக தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்பாசன வசதி பெறும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு