Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அறிவிப்பு

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அறிவிப்பு

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் மீது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, அவரை சர்வதேச அளவில் தேடப்படும் நபர்கள் பட்டியலில் சேர்த்து, பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது பிரான்சில் வசித்து வரும் பாவெல் துரோவ், ஏற்கனவே ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளார். அவர் மீது குற்றவியல் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரஷ்யாவின் குற்றச்சாட்டின்படி, உக்ரைன் உளவு அமைப்புகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள் நாசவேலை, பயங்கரவாத தாக்குதல்கள், படுகொலை திட்டங்கள் மற்றும் இணையவழி மோசடிகளை ஒருங்கிணைக்க பயன்படுத்தியதாக கூறப்படும் பல டெலிகிராம் சேனல்கள் மற்றும் உரையாடல்கள் அகற்றப்படவில்லை.

Advertisement
இதனாலேயே டெலிகிராம் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ரஷ்ய தரப்பு விளக்கம் அளித்துள்ளது.ரஷ்யாவில் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தியனுப்பும் செயலிகளில் ஒன்றாக டெலிகிராம் இருந்து வரும் நிலையில், அதன் நிறுவனர் மீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இதற்கிடையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய அதிகாரிகள் தனக்கு எதிராக குற்றவியல் விசாரணையை தொடங்கியிருப்பதாகவும், டெலிகிராம் செயலியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே போலியான காரணங்களை முன்வைப்பதாகவும் பாவெல் துரோவ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு