Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

டம்மி முதல்வர், ஜோக்கர் அமைச்சர்கள்; தமிழக அரசை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

டம்மி முதல்வர், ஜோக்கர் அமைச்சர்கள்; தமிழக அரசை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்கத் தவறியதாக தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசைக் கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி, தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார். கட்சியின் முதன்மைச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான கே.என். நேரு வரவேற்புரை நிகழ்த்தினார்.அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசின் செயல்பாடே காரணம் என குற்றம்சாட்டினார். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், முதலமைச்சர் விஜய் இதுகுறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்றார். ஆடிப்பெருக்கு நாளான இன்று காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டிய சூழலில், டெல்டா பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.மேலும், கர்நாடக முதலமைச்சரைச் சந்திப்பதை விட, தமிழக விவசாயிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்தாரா என்று கேள்வி எழுப்பினார். ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்தும் பாஜக குறித்து கூட பேசத் தயங்குகிறார் என்றும், கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து கருத்து தெரிவிக்கத் துணிவில்லை என்றும் விமர்சித்தார்.காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், விவசாயிகள் துயரத்தில் இருக்கும் நிலையில் அமைச்சர்கள் வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதை திசைதிருப்பும் முயற்சியிலேயே அரசு செயல்படுகிறது என்றும், முதலமைச்சர் தினமும் ரீல்ஸ் வெளியிட்டு மக்களின் கவனத்தை மாற்ற முயல்கிறார் என்றும் தெரிவித்தார்.காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் அரசு அக்கறை காட்டவில்லை என்றாலும், திமுக மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடி வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், வேளாண் பட்ஜெட்டை திருப்பதி கோவிலில் வைத்து பூஜை செய்தது வேளாண்துறை அமைச்சர் வினோத் என்றும் அவர் குறிப்பிட்டார்.தமிழக அமைச்சர்கள் பெரும்பாலும் ரீல்ஸ் உருவாக்குவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள் என்று விமர்சித்த அவர், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் செய்தியாளர்களை பார்த்தாலே தவிர்க்கிறார் என்றும் கூறினார்.
Advertisement
மேலும், அமைச்சரவையில் உள்ள சிலரை கடுமையாக விமர்சித்து, அமைச்சர்களின் உறவினர்களே ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவதாகவும், யார் அமைச்சர் என்பது அதிகாரிகளுக்கே தெளிவில்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.முதலமைச்சர் முதல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் ரீல்ஸ் வெளியிடுவதிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும், கழிவறை உள்ளிட்ட இடங்களிலும் கூட ரீல்ஸ் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார். தமிழகத்தில் இதுபோன்ற ரீல்ஸ் மையப்படுத்தப்பட்ட ஆட்சியை இதற்கு முன் மக்கள் பார்த்ததில்லை என்றும் விமர்சித்தார்.திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களையே தற்போதைய முதலமைச்சர் ஆய்வு செய்து, அதனை மையமாகக் கொண்டு ரீல்ஸ் வெளியிடுகிறார் என்றும், காவிரி பிரச்சினை தீவிரமாக இருக்கும் நேரத்திலும் அதிலேயே கவனம் செலுத்துகிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.மேலும், "அடுத்த பிறவியில் விவசாயியாகப் பிறக்க வேண்டும்" என்று கூறும் முதலமைச்சர் விஜய், அதனை இப்போதே நடைமுறைப்படுத்தலாமே என்றும் கேள்வி எழுப்பினார். தற்போதைய ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயிகள்தான் என்றும், விவசாயிகள் நடத்தும் போராட்டங்களை திமுக தூண்டிவிட்டதாக கூறி முதலமைச்சர் அவர்களை இழிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் பலவீனமான ஆட்சி நடைபெறுவதால்தான் மேகதாது அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது என்றும் கூறினார்.பேச்சின் இறுதியில், "மேகதாது பிரச்சினையில் அமைதியாக இருக்கும் முதலமைச்சரே, வாயைத் திறங்க... விவசாயிகளின் வேதனையைப் புரிந்துகொள்ளுங்கள்" என்று முழக்கமிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு