தமிழக ஆளுநர் அர்லேகர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். டெல்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் இன்று டெல்லி சென்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.
Advertisement
இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் அர்லேகர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.