ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு

தமிழக ஆளுநர் அர்லேகர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். டெல்லியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேகர் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் இன்று டெல்லி சென்று ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் அர்லேகர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.