Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி

சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். 21 நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்த அவரை டெல்லி போலீசார் சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இந்த நிலையில், சோனம் வாங்சுக் சட்டவிரோதமாக அரசு மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி, அவரது மனைவி கீதாஞ்சலி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

Advertisement
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு, போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மூன்று நாட்களுக்குள் விளக்க அறிக்கை தாக்கல் செய்யுமாறு முன்பே உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு இன்று (ஜூலை 21) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சோனம் வாங்சுக்கை அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கியது. மேலும், அவருக்கு தேவையான சிகிச்சைகளை தொடர்ந்து அளிக்கும் வகையில் மருத்துவர்கள் கொண்ட சிறப்பு குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு