Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 06 அக்டோபர் 2026 | 20 புரட்டாசி பராபவ வருடம்

செவிலியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

செவிலியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

செவிலியர்கள் போராட்டத்தின்போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது காவல்துறை நடத்திய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு செவிலியர்களுக்கு ஆதரவாகப் பேசிய தவெக நிர்வாகிகளும், தற்போது அமைச்சர்களாகப் பொறுப்பு வகிப்பவர்களும், ஆட்சிக்கு வந்த பிறகு மாறுபட்ட அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், 'பாசிசம், பாயாசம்' எனப் பேசிய முதலமைச்சர், செவிலியர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை எவ்வாறு நியாயப்படுத்துவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்துப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும்போதுகூட அவற்றை ஏற்காமல் விமர்சிப்பவர்களை அவதூறாகப் பேசுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மீது எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement
தனது துறையைச் சேர்ந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் முன்வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டம் நடைபெற்ற இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி அழைத்துச் சென்று செவிலியர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். கைது செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மேலும், செவிலியர்களுடன் ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு