Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 05 நவம்பர் 2026 | 19 ஐப்பசி பராபவ வருடம்

சென்னை மெட்ரோ ரெயிலில் அக்டோபரில் 1.08 கோடி பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயிலில் அக்டோபரில் 1.08 கோடி பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரெயில்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 1.08 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் வசதியான போக்குவரத்து சேவையை மெட்ரோ ரெயில் நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மொத்தம் 1,08,23,408 பேர் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அக்டோபர் 16-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 4,51,705 பேர் பயணம் செய்துள்ளனர். பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் 1,02,40,136 பேர் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 14.64 கி.மீ. நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வழியாக வடபழனி வரையிலான 11 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களைப் பயன்படுத்தி 5,83,272 பேர் பயணித்துள்ளனர். பயணச்சீட்டு முறைகளைப் பயன்படுத்தியோர் விவரம்: அக்டோபர் மாதத்தில் சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது இயக்க அட்டை) மூலம் 52,05,718 பேர் பயணம் செய்துள்ளனர். QR குறியீடு அடிப்படையிலான பயணச்சீட்டு முறைகளைப் பயன்படுத்தியவர்களின் விவரம் வருமாறு: - ஒற்றைப் பயணத்திற்கான காகித QR டிக்கெட் – 22,52,397 பேர் - ONDC – 13,95,128 பேர் - WhatsApp – 4,74,602 பேர் - Chennai One App – 4,26,780 பேர் - Paytm – 3,35,336 பேர் - PhonePe – 1,76,364 பேர் - Static QR – 2,20,624 பேர் - Online QR – 2,02,664 பேர் - CMRL மொபைல் செயலி (SVP) – 1,33,795 பேர் 20 சதவீத கட்டணச் சலுகை Digital SVP, QR குறியீடு, WhatsApp (+91 83000 86000), Paytm, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Advertisement
ஆனால், மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு கவுண்டர்களில் நேரடியாகப் பெறப்படும் ஒற்றைப் பயணத்திற்கான காகித QR டிக்கெட்டுகளுக்கு இந்தச் சலுகை பொருந்தாது. மேலும், மெட்ரோ ரெயில்கள் மற்றும் நிலையங்களைப் பராமரிப்பதில் ஒத்துழைப்பு அளித்து வரும் பயணிகள் அனைவருக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,385
🥈 Silver ₹210.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு