Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

சென்னையில் 2-வது நாளாக ரவுடிகள் வேட்டை: 147 பேர் கைது

சென்னையில் 2-வது நாளாக ரவுடிகள் வேட்டை: 147 பேர் கைது

சென்னையில் குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்திய அதிரடி சோதனையில், 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 49 பேர் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஆவர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் டாக்டர் ஏ. அமல்ராஜ் உத்தரவின்படி, மாநகரின் அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையாளர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடந்த நவம்பர் 9-ஆம் தேதி நடைபெற்ற முதல் நாள் சோதனையில், 185 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட மொத்தம் 222 பேர் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 10-ஆம் தேதி இரண்டாவது நாளாக ரவுடிகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது குற்றப்பின்னணி கொண்டவர்கள் மற்றும் சரித்திரப் பதிவேட்டில் இடம்பெற்றிருந்த 631 பேர் உள்பட மொத்தம் 769 பேர் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

Advertisement
இதில் 49 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 10 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளிடம் இனிமேல் குற்றச் செயல்களில் ஈடுபடமாட்டோம் என்ற உறுதிமொழியுடன் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டது. எஞ்சிய 572 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 612 பேருக்கும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடக்கூடாது என காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பொது அமைதிக்கும் சட்டம், ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோர் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு