Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 24 செப்டம்பர் 2026 | 8 புரட்டாசி பராபவ வருடம்

சென்னையில் ரூ.150 கோடியில் 160 கி.மீ. சாலைகள் மேம்பாடு

சென்னையில் ரூ.150 கோடியில் 160 கி.மீ. சாலைகள் மேம்பாடு

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்துள்ள 160 கி.மீ. நீளமுடைய 780 பேருந்து தட மற்றும் உட்புறச் சாலைகளை ரூ.150 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் விஜய், சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது 418.56 கி.மீ. நீளத்தில் 488 பேருந்து தட சாலைகளும், 5,65.89 கி.மீ. நீளத்தில் 35,978 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சாலை அமைத்தல், சாலைகளை சீரமைத்தல், நடைபாதைகள் அமைத்தல் மற்றும் சாலை சந்திப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சியின் பேருந்து தட சாலைகள் துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

2026-27-ம் நிதியாண்டில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 360 கி.மீ. நீளமுள்ள பேருந்து தட மற்றும் உட்புறச் சாலைகளை ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
இதன் முதற்கட்டமாக, 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் சேதமடைந்துள்ள 45.13 கி.மீ. நீளமுள்ள 66 பேருந்து தட சாலைகள் மற்றும் 114.87 கி.மீ. நீளமுள்ள 714 உட்புறச் சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 160 கி.மீ. நீளமுள்ள 780 சாலைகளை ரூ.150 கோடியில் மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, நிர்வாக அனுமதிக்காக தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (TUFIDCO) மூலம் திட்ட அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான அனுமதி வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அனுமதி கிடைத்ததும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் உடனடியாக கோரப்பட்டு, எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,000
🥈 Silver ₹250.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு