Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

சென்னையில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை - அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைப்பு

சென்னையில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை - அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைப்பு

சென்னையில் நடைபெற்ற இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்து, விழாப் பேருரை ஆற்றினார். தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை அதிகரிப்பது, இலக்கியச் சிந்தனையை வளர்ப்பது, தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களுடன் இந்தப் பயிற்சிப் பாசறை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் இலக்கியங்களை மதிப்பெண்களுக்காக மட்டும் மனப்பாடம் செய்வது என்ற எண்ணத்தை மாற்றி, மாணவர்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கு இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதும் இதன் நோக்கமாகும். மேலும், தமிழ் மொழி வாழ்வியலுக்கு ஏற்ற மொழி என்பதை கல்லூரி மாணவர்கள் அறியும் வகையிலும் இப்பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இன்று (25.09.2026) இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.

Advertisement
இதில், “இளந்தமிழும் இளைய தலைமுறையும்” என்ற தலைப்பில் தமிழ்மாமணி மதுரை இராமகிருஷ்ணன், “வாழ்வியலும் இலக்கியமும்” என்ற தலைப்பில் வழக்கறிஞர் ராஜாராமன், “வெற்றிக்களம் கண்ட வீரத்தமிழ்ப்பெண்கள்” என்ற தலைப்பில் முனைவர் வே. ஸ்ரீலதா, “தமிழிலக்கியத்தில் அடையாள மீட்டுருவாக்கம்” என்ற தலைப்பில் எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ், “பாதுகாப்பான செய்யறிவு (AT) சமூகம் அமைப்பது எப்படி” என்ற தலைப்பில் சைபர் சிம்மன், “சங்ககாலத்தில் வாழ்வியல் கோட்பாடுகள்” என்ற தலைப்பில் அனுகிரகா ஆதிபகவன் ஆகியோர் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு