Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

சென்சார் சிக்கலை கடந்து வரும் ‘418’ படம்... மிரட்டும் டிரெய்லர் வெளியீடு

சென்சார் சிக்கலை கடந்து வரும் ‘418’ படம்... மிரட்டும் டிரெய்லர் வெளியீடு

ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘418’திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. திகில் நிறைந்த காட்சிகளுடன் இடம்பெற்றுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 15 ஆண்டுகளாக பூட்டி, சீல் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரியின் ‘418’ என்ற அறையைச் சுற்றியே இப்படத்தின் கதை நகர்கிறது. அந்த அறையில் தொடர்ந்து நிகழும் மர்மமான மற்றும் அச்சமூட்டும் சம்பவங்கள்தான் படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன. வழக்கமான நகைச்சுவை கலந்த ஹாரர் படங்களுக்கு மாறாக, ‘418’ முழுக்க சீரியஸ் ஹாரர் த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் முதலில் ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் (CBFC) சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் ரிலீஸ் தள்ளிப்போனது.

Advertisement
படத்தில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான திகில் காட்சிகள் தொடர்பாக சென்சார் தரப்பில் ஆட்சேபனை எழுந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, திரைப்படம் ‘ஏ’ சான்றிதழுடன் வெளியாகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தன் நடகௌடா, ‘418’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், ‘418’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. வருகிற அக்டோபர் 23-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு