Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தேன் - ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டிய நடிகர் மாதவன்

நீண்ட நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தேன் - ‘மொத ராத்திரி’ படத்தை பாராட்டிய நடிகர் மாதவன்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் **‘மொத ராத்திரி’**. இப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாகவும், அனிஷ்மா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது தமிழ் திரைப்படம் இதுவாகும். கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், புதுமணத் தம்பதியின் வாழ்க்கையில் இடம்பெறும் காதல் மற்றும் நகைச்சுவை நிகழ்வுகளை மையமாகக் கொண்டுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ‘மொத ராத்திரி’, தற்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. படத்தை பார்த்து வரும் திரைப்பிரபலங்கள், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி வருகின்றனர்.

Advertisement
அந்த வகையில், நடிகர் மாதவன், ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்த்துள்ளார். படத்தை வெகுவாக ரசித்த அவர், அதன் திரைக்கதை, காட்சியமைப்பு மற்றும் நடிகர்களின் நடிப்பை பாராட்டியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் படத்தை முழுமையாக ரசித்ததாகக் குறிப்பிட்ட மாதவன், படம் பார்த்தபோது மனம் திறந்து சிரித்ததுடன், பல காட்சிகளில் உற்சாகமாக கைதட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ‘மொத ராத்திரி’ அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம் என்றும், படக்குழுவினரின் உழைப்புக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்றும் மாதவன் தனது பாராட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு