Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

செஞ்சி பகுதியில் மீண்டும் அதிர்ச்சி... 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செஞ்சி பகுதியில் மீண்டும் அதிர்ச்சி... 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயற்சி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமியை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமாரின் 7 வயது மகள், அங்குள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சிறுமி தனது கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைக்குச் சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிறுமியைப் பிடித்து கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுமி கூச்சலிட்டு அலறியுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்துள்ளனர். இதைக் கண்ட மர்ம நபர்கள், சிறுமியை சாலையிலேயே விட்டுவிட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கடத்த முயன்ற நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
ஏற்கனவே மாயமான சிறுமியால் நீடிக்கும் பதற்றம் செஞ்சி பகுதியில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி ஆலம்பூண்டி அருகே தாயுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா அதிகாலையில் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிறுமி மாயமாகி இன்றுடன் 30 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெயங்கொண்டான் கிராமத்தில் மற்றொரு 7 வயது சிறுமியை மர்ம நபர்கள் கடத்த முயன்றதாக வெளியாகியுள்ள தகவல் செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அச்சத்தை அதிகரித்துள்ளது. அடுத்தடுத்து சிறுமிகள் தொடர்பான சம்பவங்கள் நிகழ்வதால் பெற்றோர்கள் மத்தியில் கவலையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு