Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 04 நவம்பர் 2026 | 18 ஐப்பசி பராபவ வருடம்

செஞ்சி சிறுமி மாயமான சம்பவம்: லாரி டிரைவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

செஞ்சி சிறுமி மாயமான சம்பவம்: லாரி டிரைவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமி காணாமல் போன அன்று அந்தப் பகுதியில் பயணித்த 13 லாரி டிரைவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி (7). கடந்த 11-ம் தேதி மாலை தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலையில் அவர் திடீரென மாயமானார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். ஆனால், விசாரணையில் எந்தவித துப்பும் கிடைக்காததால், வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சிறுமி மாயமாகி 23 நாட்கள் கடந்துள்ள நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையைத் தொடங்கி 13 நாட்கள் ஆகியும் இதுவரை வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி.

Advertisement
துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்கள் மற்றும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு ஆலம்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தேநீர் கடைகள், உணவகங்களில் பணிபுரிபவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமி மாயமான அன்று இரவு ஆலம்பூண்டி-செஞ்சி சாலையில் சென்ற தேசிய அனுமதி (National Permit) பெற்ற லாரிகளை ஓட்டிய 13 டிரைவர்களை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களைத் தனித்தனியாக வரவழைத்து, சிறுமி மாயமானது தொடர்பாக பல்வேறு கேள்விகளைக் கேட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், வடமாநிலத் தொழிலாளர்கள், டிராக்டர் டிரைவர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சிறுமி மாயமான சம்பவத்தில் துப்பு கிடைக்காத நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு