விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட வெடி விபத்தில், அங்கிருந்த ஓர் அறை முழுமையாக இடிந்து தரைமட்டமானது. உணவு இடைவேளையின்போது விபத்து நிகழ்ந்ததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிரமாக நடைபெற்ற பட்டாசு தயாரிப்பு சிவகாசிக்கு அருகிலுள்ள மம்சாபுரத்தில் வாரி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, பட்டாசு தயாரிக்கும் பணிகள் அங்கு மும்முரமாக நடைபெற்று வந்தன. வெடி விபத்தில் தரைமட்டமான அறை இந்நிலையில், இன்று மதியம் ஆலையில் உள்ள ஓர் அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறின.
Advertisement
இதன் காரணமாக அந்த அறை முற்றிலும் இடிந்து விழுந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உணவு இடைவேளை என்பதால் தொழிலாளர்கள் அறையை விட்டு வெளியே சென்றிருந்தனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.