Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

சிங்கப்பெண் 2026: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த குறும்படப் போட்டி

சிங்கப்பெண் 2026: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த குறும்படப் போட்டி

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் மாநில அளவிலான குறும்படப் போட்டி நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான உதவியை வழங்குவது, பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் காவல்துறையின் வெளிப்படையான செயல்பாட்டை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக இந்த குறும்படப் போட்டி நடத்தப்படுகிறது. இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும் தங்களின் பங்கு மற்றும் பொறுப்பை உணரச் செய்வதே போட்டியின் நோக்கமாகும். குறும்படங்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்: 1. பெண்களின் பாதுகாப்பில் ஆண்களின் பங்கு 2.

Advertisement
குற்றங்களைத் தடுப்பதில் பார்வையாளரின் தலையீடு 3. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் சமூகத்தின் பங்கு போட்டிக்காக சமர்ப்பிக்கப்படும் குறும்படங்கள் தமிழில் இருக்க வேண்டும். அவற்றின் கால அளவு 2 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தனிநபராகவோ அல்லது அதிகபட்சம் 5 பேர் கொண்ட குழுவாகவோ மாணவர்கள் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் தங்களது குறும்படத்துடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட உறுதிப்படுத்தும் சான்றிதழையும், முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவுப் படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்ய https://bit.ly/SSF-ShortFilmCompetition என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம். குறும்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் **10.10.2026** ஆகும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் சமூக பொறுப்புணர்வை வளர்ப்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். எனவே, அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் போட்டியில் பங்கேற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்துமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு