Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 11 செப்டம்பர் 2026 | 26 ஆவணி பராபவ வருடம்

சாலமன் பாப்பையா மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு: முதல்-அமைச்சர் விஜய்

சாலமன் பாப்பையா மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு: முதல்-அமைச்சர் விஜய்

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு முதல்-அமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தமிழின் சிறப்பையும், தமிழர்களின் வாழ்க்கை முறையையும் பட்டிமன்றங்கள் மூலம் உலக அளவில் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா என்று குறிப்பிட்டுள்ளார். நகைச்சுவை கலந்த பேச்சாற்றலுடனும் ஆழமான தமிழ்ப் புலமையுடனும் சமூகக் கருத்துகளை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்தவர் சாலமன் பாப்பையா என விஜய் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக இல்லாமல், மக்களின் சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் கூறியுள்ளார். சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு