மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி நாராயணசாமி (71) காலமானார். அவரது மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாந்தி நாராயணசாமி மறைந்த செய்தி தனக்கு மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளித்ததாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பழகுவதற்கு மிகவும் இனிமையான குணம் கொண்ட சாந்தியின் மறைவு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவரை நேசித்த அனைவருக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
மேலும், சாந்தி நாராயணசாமியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். சாந்தியின் ஆன்மா சாந்தியடையவும், இந்தப் பேரிழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கவும் பிரார்த்திப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.